சிங்கப்பூரில் வேலை ரூ.4 லட்சம் மோசடி

ராமநாதபுரம் : சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஹல்லுார் ரஹ்மான். இவர் மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளராக உள்ளார். இவரது மகனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக பரமக்குடியில் கன்ஸ்சல்டன்சி நடத்தும் அருண்குமார் கூறியுள்ளார். இதனை நம்பிஅவரிடம் 2019 நவ.18ல் ரூ.4 லட்சம் கொடுத்தார்.வேலையும் வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து ஹல்லுார்ரஹ்மான் ராமநாதபுரம்மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

              ஏ.டி.எம்.,மில் செலுத்துவதாக ரூ.49,500 மோசடி

தேனி : தேனியில் ஏ.டி.எம்.,மில் பணம் செலுத்த உதவுவதாகக் கூறி டெக்ஸ்டைல் மேலாளரிடம் ரூ.49 ஆயிரத்து 500 மோசடி செய்து திருடியதாக ஆண்டிபட்டி கொண்டம நாயக்கன்பட்டி பட்டதாரி மணிமேகலையை 23, போலீசார் கைது செய்தனர்.

               தொழிலாளர் சட்ட நகல் எரிப்பு: 18 பேர் கைது

தேனி : தேனியில் தொழிலாளர் சுருக்கத்திருத்த சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

                அரசு ஊழியர்கள் மறியல் : 200 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

                          இருவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் : வடமதுரையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ. இவரை கள்ளிமந்தையம் அருகே பழநி கோம்பைப்பட்டி தங்கதுரை 27, ஜெகநாதன் 27 ஆகியோர் கொலை செய்தனர். இவ்வழக்கில் இருவரும் சிறையில் உள்ளனர். இந்நிலையில் எஸ்.பி., ரவளிப்பிரியா பரிந்துரையின் படி, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

                 ஓரின சேர்க்கை வாலிபருக்கு 27 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த, 14 வயது சிறுவனை, 2019 ஏப்., 28ல், வாலிபர் ஒருவர் கடத்தி சென்றார். மே, 2ல் சிறுவன் வீடு திரும்பினார். நான்கு நாட்களாக, தன்னை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக, தன் பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளார்.இதையடுத்து, சிறுவனை கடத்தி சென்ற, கொடுமுடியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல், 35, மீது கடத்தல், ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிந்து, கொடுமுடி போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சிறுவனை கடத்தியதற்காக ஏழு ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம், போக்சோவில், 20 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார்.

                                இந்தியாவில் குற்றம்

16 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை
அசாம் மாநிலம் கோர்பா என்ற பகுதியில் 16 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொன்றனர். பின்னர் எதிர்ப்பு தெரிவித்த தந்தை மற்றும் அந்த வீட்டில் இருந்த உறவுக்கார 4 வயது சிறுமியையும் கொலை செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது.

               பிரதமரின் சகோதரர் லக்னோவில் ‘தர்ணா’

லக்னோ : பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, நேற்று லக்னோ விமான நிலையத்தில், திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

   நாவல்னிக்கு இரண்டாண்டு சிறை ரஷ்யாவில் மீண்டும் போராட்டம்

மாஸ்கோ : ரஷ்ய எதிர்கட்சி தலைவர், அலெக்சி நாவல்னியை, இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரஷ்யாவில் மீண்டும் போராட்டம் வலுத்துள்ளது.

             மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு

யாங்கூன்: மியான்மரில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை கண்டித்து, ஏராளமானோர், கார்களில் ஒலி எழுப்பியும், மேளம் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here