அரியலுார் அருகே, 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற, விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார். அரியலுார் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 20. சென்னையில் உள்ள தனியார் நிறுவன விடுதியில் வார்டனாக பணியாற்றி வரும் இவர், திருமானுார் பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.சிறுமியிடம் மோகன்ராஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். எதிர்ப்பு தெரிவித்து திட்டிய சிறுமிக்கு மோகன்ராஜின் தந்தை முருகேசன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறுமியின் தாய் புகார்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிந்து மோகன்ராஜை கைது செய்தனர். சிறுமியை மிரட்டிய முருகேசனை தேடி வருகின்றனர்.பாய்ந்தது குண்டர் சட்டம்திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் சூசை நகரில், புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது. 113 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
சில மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட விடுதி வார்டன் துரைப்பாண்டி, 35, என்பவரை சேத்துப்பட்டு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். தற்போது, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பவன்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.