கீழ்பாக்கம் பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் நேற்று இரவு புகுந்த ஸ்ரீகாந்த், தூங்கிக் கொண்டிருந்த கலைக்கல்லூரி மாணவி ஒருவருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகள் எழுந்து சத்தமிட ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின் இரண்டு மணி நேரம் கழித்து பெண்கள் விடுதியில் தவறவிட்ட மொபைல் போனை எடுப்பதற்காக மீண்டும் வந்துள்ளார். அப்போது விழித்திருந்த பெண்கள் ஸ்ரீகாந்தை கையும் களவுமாக பிடித்து தாக்கி கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கலைக் கல்லூரி மாணவி மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு முன்னதாக மேலும் இரண்டு மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தின் தந்தை ஸ்டார் இன்சூரன்ஸில் மேனேஜராகவும் அவரது தாய் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராகவும் பணியாற்றி வருவது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தின் தந்தை ஸ்டார் இன்சூரன்ஸில் மேனேஜராகவும் அவரது தாய் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராகவும் பணியாற்றி வருவது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் அனஸ்தீஸியா கிரிட்டிகள் கேர் என்ற டிப்ளமோ படிப்பை கடந்த 2021 ஆம் ஆண்டு முடித்துள்ளதும், தற்போது சேத்துப்பட்டு நவரோஜி சாலையில் உள்ள கந்தசாமி பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கி திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்திடம் கீழ்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.