மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த இருக்கிறது. புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதில் உள்ள சாதகம் மற்றும் பாதகத்தை ஆராய குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே உயர்க்கல்வி குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்துவிட்டது.
இந்நிலையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.